பாகிஸ்தான் | Tik Tok-ல் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்!

பாகிஸ்தானில், டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அன்வருல்-ஹக். இவரது மகள் ஹிரா (வயது 15). அன்வருல்-ஹக் தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர் மகள் ஹிரா ‘டிக் டாக்’ சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது அவருடைய தந்தைக்கு பிடிக்காததால், டிக் டாக்கில் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்ததாக தெரிகிறது. ஆனால் அதனை பெரிதாக கண்டுக்கொல்லாத சிறுமி தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

இதற்கிடையே பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு சிறுமியின் குடும்பம் கடந்த 15ல் தேதி வந்தனர். அப்போது, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டுபட்டு சிறுமி உயிரிழந்ததாக அவரது தந்தை தெரிவித்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

அதன்படி, டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரமடைந்த தந்தை தனது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகிஸ்தானில், டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.