மகளிர் டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்!

தென்னாப்பிரிக்காவுக்கு வங்கதேசம் அணி 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 29வது லீக் போட்டியில், ஏ குழுவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மலாபா 2 விக்கெட்டுகளும், மரிசானே காப், ஷப்னிம் இஸ்மாயில், நாடின் டி கிளெர்க் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 118 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யவுள்ளது. அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்ய தென்னாப்பிரிக்கா 18.5 ஓவர்களில் இந்த ரன்களை சேஸ் செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.