போராடி தோற்ற பாகிஸ்தான்! 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்…

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது. அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் பவுலர்கள் அனைவரும் அடித்து துவைக்கப்பட்ட நிலையில், அப்ரிடி மட்டும் 10 ஓவர்களில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். அதோடு 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார். இந்நிலையில், 368 ரன்களை இலக்காக  கொண்டு பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா சபீக்கும், இமாம் உல் ஹக்கும் பொறுப்பை உணர்ந்து ஆடியதோடு அடித்தும் அடி இருவரும் வெற்றிகரமாக அரைசதத்தை கடந்தனர். இதில் இமாம் உல் ஹக் 70 ரன்களிலும், அப்துல்லா சபீக் 64 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இவர்களுக்கு அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து அடித்து ஆடியதால் அணியின் ரன் கணக்கு உயர்ந்தவாறு இருந்தது. அதே நேரத்தில் குறிப்பிட்ட இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளும் சரிந்தது. இறுதியாக 45 ஓவர்கள் 3 பந்துகள் வீசப்பட்டிருந்த நிலையில் 305 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அனைத்து விக்கேடுகளையும் இழந்து போராடி தோற்றது. இறுதியாக பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ஆஸ்திரேலியா ருசித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.