இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ராணுவம்

இந்தியா விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இந்தியாவின் சோனிக் வகை ஏவுகணை  கடந்த 9ம் தேதி பாகிஸ்தான்  எல்லையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையாக உருவெடுத்தது.…

இந்தியா விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் சோனிக் வகை ஏவுகணை  கடந்த 9ம் தேதி பாகிஸ்தான்  எல்லையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையாக உருவெடுத்தது. இதுதொடர்பாக போதிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போதுமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற விபத்துகள் மக்களுக்கும், விமானப் பயணிகளுக்கும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது. அலட்சியத்தால் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத விளைவுகளில் மிகுந்த கவனத்துடன் இருந்து எந்த அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 9ஆம் தேதி ​​பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்பக் கோளாறால் தவறுதலாக ஏவப்பட்ட ஏவுகணை எதிர்பாராத விதமாக பாகிஸ்தானில் விழுந்துவிட்டது என்று தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம், இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தமளிப்பதாகவும், இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.