முக்கியச் செய்திகள் சினிமா

கர்ணன் திரைப்படத்தில் இடம்பெறாத பாடல்

கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது கருத்து சொல்ல வந்த காவியமோ, சிவாஜி நடித்த கர்ணனின் கதாபாத்திரம் வாழ்வாங்கு வாழச் சொல்கிறது. இத்திரைப்படத்திற்காக எழுதப்பட்டு, திரைப்படத்தில் இடம்பெறாத பாடல் குறித்த விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

கடையெழு வள்ளல்கள் பாரி, ஓரி, நள்ளி, ஆய், காரி, பேகன், அதியமான் ஆகிய ஏழுபேர் என்பதை அறிவோம். கொடிய வறுமையான பசி குறித்து ‘பசி என்னும் தீப்பிணி’, ‘அற்றார் அழிபசி’ என்ற தொடர்களால் குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். சிறப்புமிக்க ஈகையைக் குறிப்பிட்டுப் பாடும் கவிஞர்கள் மத்தியில், கவியரசின் கற்பனையில் கொடை வள்ளலாம் கர்ணனின் பெருமை போற்றும் பாடலே “மழை கொடுக்கும்”.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐப்பசி, கார்த்திகையில் மழை, விடாது பெய்யும் என்பது உள்ளிட்ட இயற்கையின் கொடைச் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, இயற்கை கூட ஏதாவது இரண்டு மாதம், மூன்று மாதம் தான். ஆனால், கர்ணனின் கரங்கள், எல்லா மாதத்திலும் கொடையை அள்ளிக் கொடுக்கும் எனக் கூறுகிறார் கவியரசர் கண்ணதாசன்.

பொருள் இல்லாத வறியவர்க்குப் பொருளைக் கொடுத்து உதவவேண்டும். மற்றவர்க்குக் கொடுப்பது எல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுடையதுதான். ஆனால் இயற்கையோ எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கொடுக்கிறது. அதைப் போல் கர்ணனும் எதிர்பார்ப்பின்றி வழங்குகிறான்.

‘கர்ணன்’ திரைப்படத்தில் டி.எம்.சௌந்தராஜனும், சுசீலாவும் பாடிய ‘மஹாராஜன் உலகை ஆளலாம்’என்னும் பாடல் இடம்பெறாமல் போனது. பாடலின் தாளமும், பாடும் முறையும் மாறுபட்டுக் காணப்படும் அந்தப்பாடலில் சௌந்தராஜனின் குரல், வழக்கத்துக்கு மாறாக அமைந்தது.

‘கர்ணன்’ படமும், அதன் பாடல்களும் பிரமாண்டம் என்றால் ஒரு குறிப்பிட்ட பாடலை கர்ணனின் ஈகையை வாழ்த்தி திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ் போன்றோர் பாடியிருப்பது இன்னும் பிரமாண்டம். மஹாராஜன் பாடல் திரைப்படத்தில் இடம்பெறாமல் போனாலும், கர்ணனைப்போல் மனதை ஆட்கொண்டு நிலைத்து நிற்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram