சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறாவது முறையாக நடைபெற்ற ‘ஓவிய விழா’வை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
ஒருவர் தனது மன உணர்வுகளை எழுத்துகளின் மூலமாக வெளிப்படுத்தினால் அவர் கவிஞர். அவற்றை தூரிகையால் வெளிப்படுத்தினால் அவர் ஓவியர். மொழி, இனம், மதம், தேசம் என வேறுபாடற்ற கலை ஓவியம். ஓவியங்கள் தொன்மையானது மற்றும் நவீனகால ஓவியங்கள் என வகை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ‘ஓவிய விழா’ இன்று நடைபெற்றது. கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர், இந்த ஆண்டு ‘ஓவிய விழா’ நடைபெற்றது. இந்த ஓவிய விழாவில் 80 ஓவியர்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களை காட்சிக்காக வைத்திருந்தனர்.
இதையும் படியுங்கள் : மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – தென்னாப்பிரிக்காவுக்கு 157 ரன்கள் இலக்கு
குறிப்பாக கண்காட்சியில் எண்ணெய் ஓவியம் (oil painting) , வண்ணக்கோள் (pastel painting), செயற்கை வண்ண கூழ்மங்கள் (acrylic painting), நீர் வண்ணம் (water painting), மை ஓவியங்கள் (ink painting), மணல் ஓவியம் (sand painting) என பல வகையான ஓவியங்கள் இதில் இடம்பெற்றன. ஒவ்வொரு ஓவியர்களும் 30க்கும் மேற்பட்ட அசாத்திய ஓவியங்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காட்சிப்படுத்தினர்.
ஓவிய கண்காட்சி என்றாலே பொதுவாக பெரிய அரங்குகளில் ஓவியங்களை கண்டு லட்சக்கணக்கில் பணம் செலவிட்டு ஓவியங்களை வாங்கி செல்வர். அந்த கலாச்சாரத்தை மாற்றும் வகையில் தற்போது பொதுமக்கள் அதிகம் புழங்கும் பூங்காவில் மக்களுக்கு ஓவியங்கள் தொடர்பான ஈடுபாட்டை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என ’ஓவிய விழா’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை வரைந்த ஓவியர்கள், மக்கள் தங்களின் படைப்புகளை கண்டு களிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களை மக்கள் ஓவியங்களை வரைய ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் பொழுதுபோக்குகாக மக்கள் ஒன்று கூடும் பூங்காவில் இதுபோன்ற ஓவிய
கண்காட்சி வைக்கப்பட்டது ஒரு புதிய முயற்சியாக உள்ளதாகவும், தமிழகமெங்கும்
இதை போன்று புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டால் புதிய யோசனைகள் மூலம் மக்களும்
ஓவியர்களும் பயன்படுவார்கள் என்றும் கண்காட்சியை காண வந்த பொதுமக்கள்
தெரிவித்தனர்.








