மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு 157 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் மோதியது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், மற்றொரு அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.
இதையும் படியுங்கள் : உதயநிதியின் ’கண்ணை நம்பாதே’ பட ட்ரெய்லர் வெளியானது!
அதன்படி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதி வருகின்றன. இன்று மாலை தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 53 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.