ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் குறித்த அறிவிப்பை காங்கிரசு கட்சி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை துவங்க மேற்கொள்ள உள்ளதாக காங்கிரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டாவது நடைபயணம் குஜராத்தின் போர்பந்தர் முதல் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் செல்லவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நிறைவடைந்து. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்த ராகுல் காந்தி, காஷ்மீரில் நடைபயணத்தை முடித்துக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இறுதி நாளன்று நடைபயணம் மேற்கொண்ட அவருக்கு, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து ராகுல் காந்தி வீரவணக்கம் செலுத்தினார்.
கடும் பனிப்பொழிப்பொழிவுக்கு நடுவே நடைபெற்ற இறுதி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். திமுக சார்பில் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனையும் படியுங்கள்: புதிய மதுபான கொள்கை வழக்கு – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது!
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தமது இரண்டாவது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இரண்டாவது இந்திய ஒற்றுமை பயணம் இந்தியாவின் மேற்கு எல்லையில் தொடங்கி கிழக்கு எல்லை வரை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கி குஜராத் வரை இந்த யாத்திரை நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
– யாழன்







