மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் கிரிக்கெட் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4-ம் தேதி மகளிர் பிரீமியர் லீக் தொடங்க உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. அதானி ஸ்போர்ட்ஸ் ஸ்லிங் நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கும், இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை ரூ.912.99 கோடிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கும், JSW GMR கிரிக்கெட் நிறுவனம் டெல்லி அணியை ரூ.810 கோடிக்கும், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லக்னோ அணியை ரூ. 757 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளன.
இதையும் படிக்கவும் : மகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அணியின் டி-ஷர்ட் அறிமுகம்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
மார்ச் 4ம் தேதி தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் டீசர்ட் வெளியான நிலையில் தற்போது குஜராத் அணியின் டீ சர்ட்டை அந்த அணி வெளியிட்டுள்ளது.
ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டீசர்ட்டின் பின்புறத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனையான ஆஸ்லீஹ் கார்ட்னெர் பெயர் இடம்பெற்றுள்ளது.
– யாழன்