குடியிருப்பு பகுதியில் மீண்டும் உலா வந்த படையப்பா யானை!

குடியிருப்பு பகுதியில் மீண்டும் படையப்பா யானை உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கேரள மாநிலம் மூணாறு தேவிகுளத்தில் உள்ள லக்காட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் படையப்பா யானை வனப்பகுதியில் இருந்து இறங்கி குடியிருப்புவாசிகளிடையே பீதியை…

குடியிருப்பு பகுதியில் மீண்டும் படையப்பா யானை உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கேரள மாநிலம் மூணாறு தேவிகுளத்தில் உள்ள லக்காட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் படையப்பா யானை வனப்பகுதியில் இருந்து இறங்கி குடியிருப்புவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.  மேலும் அப்பகுதியில் உள்ள வாழை, காய்கறி உள்ளிட்டவைககளை படையப்பா யானை நாசம் செய்தது.

மேலும், சத்தியன் என்ற விவசாயியின் அரை ஏக்கர் கேரட் தோட்டத்தை  சேதப்படுதியதோடு, வீடுகளை ஒட்டியிருந்த கோழிக் கூடங்கள், வேலிகள் ஆகியவற்றை உடைத்து எறிந்தது.  படையப்பா யானை குடியிருப்பு பகுதியில் பல மாதங்களாக பயிர்களை சேதம் ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தொழிற்சாலை குடியிருப்பில் உள்ள ரேஷன் கடைக்கு  படையப்பா யானை வந்தது. இதற்கு முன்பு படையப்பா யானையால் இதே ரேஷன் கடை தாக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.  இந்த நிலையில் இன்று காலை யானை மீண்டும் இந்த பகுதிக்கு வந்து பல மணி நேரம் அங்கேயே  உலாவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதன் பின்னர், தேசிய நெடுஞ்சாலைக்கு சென்ற யானை அங்கு சிறிது நேரம் நின்றுவிட்டு வனப்பகுதிக்கு திரும்பியது. இப்பகுதியில் வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  அதேபோல யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.