பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த பி.ஏ. நரேஷ் பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள்!
அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கே. சசிகலா, தொடக்கக் கல்வி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இருந்த மு. பழனிச்சாமி, தனியார் பள்ளிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் இயக்குநராக இருந்த எஸ். சுகன்யா, ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளராக இருந்த வி.சி. ராமேஸ்வரமுருகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கூடுதல் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த எஸ். உமா, அரசு தேர்வுகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநராக இருந்த கே. ஸ்ரீதேவி, பதவி உயர்வு பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பணியிட மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் மூலம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன




