குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், சென்னையில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில், அஸ்வின் வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக, டெல்லி கேபிடல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்து வரும் போட்டிகளில் அஸ்வின் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் எனவும், அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







