ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் 4 மாதங்களுக்குத் திறக்கப்படும் என்று முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் 4 மாதங்கள் திறக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம். பி ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்.பி கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பி. கனிமொழி பேசுகையில் ‘முதல்வர் அவர்கள் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, திமுக சார்பில் நாங்கள் கலந்துகொண்டு எங்கள் கருத்துகளை எடுத்துரைத்தோம். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். தாமிரம் மற்றும் உள்ளே உள்ள கோஜண்ட் ஆலையை திறக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இந்த ஆக்சிஜன் தயாரிப்பதற்கான மின்சாரத்தைத் தமிழ அரசே வழங்க வேண்டும். இதனால் துண்டிக்கப்பட்டிருக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும். ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்குவதை வைத்துக்கொண்டு தொடர்ந்து ஆலையை நடத்த ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சி செய்யக்கூடாது. மாவட்ட ஆட்சியாளர், எஸ்பி, சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் நேரடி கண்காணிப்பில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தினோம்’ என்று அவர் கூறியுள்ளார்.