கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரோ, காவல் கண்காணிப்பாளர் சாங் சாய் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கை யும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், பள்ளப்பட்டி, குளித்தலை, கோவக்குளம் உள்ளிட்ட 8 இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.







