சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை!

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் கோரி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன…

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் கோரி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.  நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல் ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கும் வரை,  சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அவகாசம் கேட்டு ஆம்னி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  “அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை” – லாலு பிரசாத்!

வரும் 24-ம் தேதி உடன் ஆம்னி பேருந்துகள் மாநகர பகுதிக்குள் இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.