100 க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து – தமிழக அரசு உத்தரவு!

மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கபட்ட நிலையில் பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட துறைகளில் போடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.