தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைந்துள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.ஜி. பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை மேற்கு மண்டல விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு எஸ்.பி. டாங்கர் பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு எஸ்.பி.2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.அசோக்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்ட் அக்ஷய் அனில் வகாரே, பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்ட் வி.லலித்குமார், பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.







