மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவு

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது.…

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2-ஆம் தேதி 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது.

ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், இதுவரை 17 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அம்மாநிலத்தில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.