முக்கியச் செய்திகள் இந்தியா

ஓமிக்ரான் அச்சுறுத்தல்; விதிகளை மாற்றியது மகாராஷ்டிரா

ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணாமாக மும்பை பன்னாட்டு விமான முணையத்தில் நுழையும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா தொற்று அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. நேற்றிரவு நிலவரப்படி உலகம் முழுவதும் 23 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இந்த தொற்று பாதிப்பை தடுக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு மும்பைக்குள் நுழையும் விமான பயணிகள் கட்டாயம் RT-PCR பரிசோதனையின் ‘நெகட்டிவ்’ முடிவை கையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த பரிசோதனை 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள 6 நாடுகளிலிருந்து மும்பை வரும் பயணிகள் கட்டாயம் 7 நாட்கள் பள்ளி, தங்கும் விடுதி என நிறுவன  தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும், உள்ளாட்டு பயணிகள் 14 நாட்களுக்கு முன்பாக கொரோனா 2ம் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனையின் ‘நெகட்டிவ்’ முடிவை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 2வது, 4வது மற்றும் 7வது நாட்களில் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். நிறுவன தனிமைப்படுத்தலில் உள்ள இவர்களை விமான நிலைய ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு வேளை பயணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர் மருத்துவமனையில் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என வந்தால் மட்டுமே அவர்கள் அடுத்தக்கட்ட விமான பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

’எங்ககிட்ட அந்த துணிச்சல் இல்லாம போச்சு’ -தோல்விக்கு விராத் சொல்லும் காரணம்

Halley Karthik

கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் சேதம்; வாகன ஓட்டிகள் அவதி

Arivazhagan CM

மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்: அதிமுக

Halley Karthik