முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் வூகான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து வந்த அவருக்குத்தான் முதன் முதலாக நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து அவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இரண்டு முறை கொரோனா தொற்று பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்த து. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு அண்மையில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.ஜே.ரீனா, “டெல்லிக்கு சென்று படிப்பதற்காக அந்த மாணவி திட்டமிட்டிருந்தார். எனவே அவருக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உடல் நலத்தோடு உள்ளார்,” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Niruban Chakkaaravarthi

’வலிமை’ அப்டேட் தாமதம்: இதுதான் காரணமாமே?

Vandhana

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

Halley Karthik