சென்னையில் வரும் 21ஆம் தேதி நம்ம ஊரு திருவிழா: அமைச்சர் தங்கம் தென்னரசு

நம்ம ஊரு திருவிழா எனும் கலைநிகழ்வு சென்னை தீவுத்திடலில் வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம்…

நம்ம ஊரு திருவிழா எனும் கலைநிகழ்வு சென்னை தீவுத்திடலில் வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் பண்டைய விழுமியங்களையும், நாட்டுப்புறக்கலைகளையும் மீட்டெடுக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா, கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பாக நடத்தப்படுவதாக கூறினார். நம்ம ஊரு திருவிழா வரும் 21 ஆம் தேதி சுற்றுலாத்துறையின் பங்களிப்போடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

அண்மைச் செய்தி: ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது

நாட்டுப்புற கலை வடிவங்கள் இடம்பெறும் என்றும், பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் வகையில் கலைசங்கமமாக இந்த நிகழ்வு திகழும் என்றும் தங்கம் தென்னரசு கூறினார். இந்திய சுதந்திர பொன்விழா ஆண்டை முன்னிட்டு 75 ஒலிப்படங்கள் திருவிழாவில் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும், மற்ற மாவட்டங்களிலும் நம்ம ஊரு திருவிழா நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தங்கம் தென்னசரசு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.