ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது

பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நங்கநல்லூர் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 62 வயது மூதாட்டி…

பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூர் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 62 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டருகே மருத்துவரும், ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான சுப்பையா வசிக்கிறார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கார் நிறுத்துவது தொடர்பாக சுப்பையாவுக்கு, அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா அந்த பெண்ணின் வீடு முன்பு சிறுநீர் கழித்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தரப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பதை அடுத்து சுப்பையா மீது பெண் வன்கொடுமை உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சுப்பையாவை ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.