அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டன.
இதனையும் படியுங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!
மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: அதிமுக பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியல் இதோ!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன்,வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்துகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையின் போது தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.