அதிமுக பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியல் இதோ!

அதிமுகவில் இதுவரை பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம்…

அதிமுகவில் இதுவரை பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : நானி படங்களிலேயே ‘தசரா’ பெரிய ஓப்பனர் – லேட்டஸ்ட் அப்டேட்!

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டன.

மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 8வது பொதுச்செயலாளரானார்.

இதுவரை அதிமுக பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியல் இதோ:

1. எம்ஜிஆர் : 1974 – 1977

2. நாவலர் நெடுஞ்செழியன் : 1977 – 1980

3. ப.உ.சண்முகம் : 1980 – 1985

4. ராகவானந்தம் : 1985 – 1987

5. எம்ஜிஆர் : 1987 (இரண்டாவது முறை)

6. ஜெ.ஜெயலலிதா : 1989 – 2016

7. சசிகலா : 2016 – 2017

8. எடப்பாடி பழனிசாமி : 2023 முதல்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.