விழுப்புரத்தில் அதிமுக அலுவலகம் நெடுஞ்சாலை தடுப்பு கட்டைகளில் அதிமுகவினர் எழுதிய விளம்பரங்களில் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படம் பெயர்களை தொண்டர்கள் அழித்தனர்.
அதிமுகவில் ஒற்றைதலைமை வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் என்று கட்சியில் இரு அணிகளாக அதிமுகவினர் பிரிந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், பதவிகாலமும் நேற்றைய தினத்துடன் முடிவடைந்துள்ளது. இதனால் அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் கட்சி இயங்க வேண்டுமன தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படம் பெயர்கள் சுவர் விளம்பரங்கள், தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கட்டைகளில் எழுதப்பட்ட ஓ.பி.எஸ் பெயர்களை விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகத்தின் வாய் மொழி உத்தரவின் பேரில் இன்று பெயிண்ட் அடித்து அதிமுகவினர் அழித்தனர். மேலும் அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படமும் பெயரும், விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டர்கள் அகற்றி வருவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.