முக்கியச் செய்திகள் தமிழகம்

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்டிக் கடைக்காரரிடம் வாரந்தோறும் ரூ.100 ரூபாய் மாமூல் வாங்கியதாக ஊதிய உயர்வு பலன்களை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி வழக்கின் தீர்ப்பினை வாசித்தார். அப்போது, ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை மூலம் மாமூல் பெறுவதை தவறாக கருதவில்லை என்பது இந்த மனு தாக்கல் செய்ததில் தெளிவாகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள்.. சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

Gayathri Venkatesan

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

Vandhana

நாளை முதல் தீவிரமடைகிறது ஊரடங்கு!

Jeba Arul Robinson