தமிழக அரசு திறமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று எதிர்கட்சிகள் பாராட்டினர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை குப்பம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் மா.சுப்ரமணியன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு திறமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் மாண்டஸ் புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று எதிர்கட்சிகள் பாராட்டி உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புயலால் சேதமடைந்த படகுகளுக்கு ஏற்றாற்போல நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார். புயலால் பாதிப்பு ஏற்படாத வகையில், மீனவ பகுதிகளில் தூண்டில் வளைவு, மதில் சுவர், குறுக்கு சுவர் போன்றவை அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.