முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, லண்டனில் இந்தியாவை அவமதித்ததற்காக கூறி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு கூடின. அப்போது ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாடளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீப்பொறி தெறிக்கும் ‘ஜிகர்தண்டா-2’ டீசர் வெளியீடு

EZHILARASAN D

உக்ரைன் விவகாரம்: புதினுடன் 7ஆம் தேதி பேசுகிறார் பைடன்

Arivazhagan Chinnasamy

விடாமல் ஆட்டம் காட்டும் மேக்னா யானை; தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

G SaravanaKumar