முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்காவில் அடுத்தடுத்து திவாலான வங்கிகள் – அதிபர் ஜோ பைடன் அளித்த உத்தரவாதம்!

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சிக்னேச்சர் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை சர்வதேச நிதி  நெருக்கடிக்கு வழி வகுக்குமோ என பலரும் அச்சத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல உத்தரவாதங்களை கொடுத்துள்ளார்.

பொதுவாகவே ஒரு நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகள் திவாலாகிறது என்றால், அந்நாடு பொருளாதார சிக்கலையோ… நிதிநிலை நெருக்கடியையோ விரைவில் சந்திக்கப் போகிறது என்பதையே உணர்த்தும். அதிலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாகும் போது அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்று, மூதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கும். அந்த வகையில், அமெரிக்காகவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் இன்னொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த அமெரிக்க முதலீட்டு சந்தையையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும், 175 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளது. அதே போல், சிக்னேச்சர் வங்கி சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் டெபாசிட் உடனும் திவாலாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், இது ஒட்டு மொத்த நிதி சந்தைகளை மோசமான நிலைக்கு கொண்டு போகும் எனவும் 2008 ஆம் ஆண்டில் உருவான சர்வதேச நிதி நெருக்கடிக்கு இது வழிவகுக்குமா என்ற அச்சமும் இன்று பலரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மோசமான சூழ்நிலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது ” இதற்கு காரணமானவர்கள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எனவும், சிலிக்கான்
வேலி பேங்க் மற்றும் சிக்னேச்சர் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அனைவருக்கும் பணம் அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். மேலும் பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேம்படுத்தப்பட உள்ளதாகவும், இதனால் மீண்டும் இதே போன்ற நிலை மற்றொரு வங்கிக்கு உருவாகாது என அவர் உறுதியளித்தார்.

இது தவிர, சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள், சிறுகுறு வணிகர்கள், அமெரிக்காவில் வரி செலுத்துபவர்கள், அமெரிக்காவின் நிதி அமைப்பு ஆகியவற்றை பாதுகாக்க அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், இன்று முதல், மேற்கூறிய வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பேங்க் முதலீட்டாளர்கள் அனைவரின் பணமும் எடுத்துக் கொள்ளும் வகையில் வங்கி நடவடிக்கைகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Jayapriya

ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தல்

Halley Karthik

புதிய சாதனை படைத்த அரபிக் குத்து பாடல்

EZHILARASAN D