வரும் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு உதகை அரசு கலைக் கல்லூரி வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவ, மாணவிகள் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யானை முகமூடிகள் அணிந்து உதகையில் பேரணி சென்றனர்.
உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலக யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்படுத்தும் வகையில், உதகையில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் வன விலங்கு உயிரியல் பிரிவு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் முதல்வர் அருள் ஆண்டனி கொடியை சேர்த்து துவைக்க வைக்க, இந்த பேரணியில் யானைகள் பாதுகாப்பது அவசியங்களை விழிப்புணர்வு பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு, சேரிங்கிராஸ் பகுதி வரை பேரணையாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சௌம்யா.மோ






