பழுதான லிப்டில் கைக்குழந்தை, தாயை காப்பாற்றிய இளைஞர்:  வீடியோ வைரல்!

லிப்ட் பழுதடைந்த போது டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவர் தைரியமாக அங்கிருந்த பெண்ணையும், அவரது குழந்தையையும் பாதுகாக்கும் நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவருவதோடு, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மனிதனாகப் பிறந்த…

லிப்ட் பழுதடைந்த போது டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவர் தைரியமாக அங்கிருந்த பெண்ணையும், அவரது குழந்தையையும் பாதுகாக்கும் நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவருவதோடு, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனிதாபிமானம் மிகவும் முக்கியமானது. சக மனிதனையும், மனிதனாக மதித்து, அவன் உள்ளத்தை புரிந்து, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே, மனிதாபிமானம். இதைத் தான், ‘உனக்கு நீ எதைச் செய்ய விரும்ப மாட்டாயோ, அதை பிறருக்கு நீ செய்யாதே’ என்கிறார், சீன தத்துவ ஞானி, கன்பூஷியஸ். அப்படிப்பட்ட இந்த மனிதாபிமானம் இன்றைய அவசர பலரிடத்திலும் குறைந்துவிட்டதோ என்ற கேள்வியும், எண்ணமும் நமக்கு பல சூழ்நிலைகளில் நமக்கு எழுவதுண்டு. காரணம் நாம் காணும் ஓவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு அப்டித்தான் உணர வைக்கும்.

ஆனால் இங்கு ஒரு இளைஞர், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஒரு பெண்ணையும், அவரது கை குழந்தையையும் தேற்றி ஆறுதல் கூறி காப்பாற்றுவது பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும்., நெகிழ்ச்சியாகலாவும் உள்ளது.

குட்நியூஸ் மூவ்மென்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சம்பவம் தொடர்பான  வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது . #HUMANITY என்று பெயரிட்டு அவர்கள் பகிர்ந்துள்ள லிப்ட் தொடர்பான அந்த வீடியோவில், கொரியர் கொடுக்க வந்த இளைஞர் ஒருவர் லிஃப்டில் பயணம் செய்கிறார். அவருடன் ஒரு பெண் தனது கை குழந்தையுடன் பயணம் செய்கிறார். தீடிரென லிப்ட் பதியிலேயே நின்றுவிட அந்த பெண் படபடப்பாகி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.

உடனே அந்த இளைஞர் அப்பெண்ணின் பயத்தை போக்கி இருவரையும் அணைத்து பிடித்து பாதுகாக்கும் முயற்சியில் இறங்குகிறார். தொடர்ந்து லிப்ட்டின் பட்டனை அழுத்தி அழுத்தி லிப்டின் கதவை திறக்க முயற்சிக்கிறார். அவரின் நீண்ட முயற்சிக்கு பிறகு லிப்ட் கதவு திறக்கிறது. பின்னர் தாயும் குழந்தையும் பத்திரமாக வெளியேறுகின்றனர். இந்த வீடியோ பகிரப்பட்ட 11 மணி நேரத்திற்குள் சுமார் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த இளைஞரின் செயலை கண்டு நெகிழ்ந்து போன நெட்டிசன்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.