“திமுகவை வீழ்த்த தவெக தலைவர் விஜய் ஒருவரால் தான் முடியும்” – செங்கோட்டையன்!

10 முறை தோல்வியை கண்ட பழனிச்சாமி திமுகவை வீழ்த்த முடியாது என்று செம்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் வேமாண்டம்பாளையத்தில் தவெக நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், “10 முறை தேர்தலில் போட்டியிட்ட எனக்கு, வேட்புமனு தாக்கல் செய்த எனக்கு, அதில் உள்ள குளறுபடிகள் தெரியாதா.. எடப்பாடி பழனிச்சாமியின் மருமகன் ஐந்து வக்கீல்களை அழைத்து வந்து தேவையில்லாமல் ஆட்டம் போட்டு வருகிறார்.

அதிமுகவிலிருந்து என்னை நீக்கியது மட்டுமில்லாமல், என் மீது எடப்பாடி பழனிச்சாமி கொலை வெறியில் உள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் தவெகவை இணைத்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். ஆனால் நான் கூறியது விஜய் மட்டுமே முதல்வர் வேட்பாளர், வேறு யாரும் கிடையாது என தெரிவித்துவிட்டேன்.

கட்சியை விட்டு நீக்கிய பிறகு கிளைச் செயலாளர் ஒருவர் துக்க நிகழ்வுக்கு நான் சென்றேன். நான் அங்கு சென்றதால் கிளைச் செயலாளரை கட்சியை விட்டு நீக்கினார்கள். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் கட்சியை விட்டு என்னை நீக்கி விட்டார்கள். 10 முறை தோல்வியை கண்ட பழனிச்சாமி திமுகவை வீழ்த்த முடியாது. அம்மாவிற்க்கு பிறகு தொடர்ந்து தோல்வி தான் திமுகவை வீழ்த்த தவெக தலைவர் விஜய் ஒருவரால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.