நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 2025-ல் வெளியான திரைப்படம் குட், பேட், அக்ளி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே பெரும் அவரவேற்பை பெற்று வசூலை அளிக்குவித்தது. இதனைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் அஜித் சிறிது காலம் சினிமாவிற்கு ஓய்வளித்துவிட்டு கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் அஜித் நடித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்திற்கு ‘டேர் டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவியான ஷாலினியின் ‘பிரேவ் ஹார்ட்ஸ் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த் ஆறிவிப்பால் நீண்டகாலமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படத்தின் படபிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்லதாக தகவல் வெளியாகியுள்ளது.




