பாடலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்

பாடலாசிரியர் முருகன் மந்திரத்துக்கு நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். இதில், சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.…

பாடலாசிரியர் முருகன் மந்திரத்துக்கு நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். இதில், சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில், ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம எனும் பாடலை அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியிருந்தனர். இந்த பாடலை முருகன் மந்திரம் எழுதியிருந்தார். இந்நிலையில், நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு பிடித்த பாடல்” என குறிப்பிட்டு பாடலாசிரியர் முருகன் மந்திரத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.