குரூப் 1, 1பி தேர்வுக்கு கருப்புமை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 1பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட…

டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 1பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

” ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு 1 மற்றும் குரூப் “1பி” பணிகள் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வின் போது விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை/ தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரேவகையான கருப்புமைப் பேனாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் :குளிர்கால கூட்டத் தொடர் | இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!

தேர்வர்கள் இந்த தேவைகளுக்கு ஒரேவகை கொண்ட கருப்புமைப் பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் கருப்புமைப் பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.