CPIM மேடையில் ‘ஸ்ரீராம் ஜெய்ராம்’ பாடல்? – நடந்தது என்ன?

This News Fact Checked by Aajtak சிபிஐஎம் சாலை சந்திப்பு நிகழ்வு மேடையில் ‘ஸ்ரீராம் ஜெய்ராம்’ என்ற பாடல் பாடப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஆத்திகத்திற்கும் CPIM…

'Shri Ram Jairam' song on CPIM stage? - What happened?

This News Fact Checked by Aajtak

சிபிஐஎம் சாலை சந்திப்பு நிகழ்வு மேடையில் ‘ஸ்ரீராம் ஜெய்ராம்’ என்ற பாடல் பாடப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஆத்திகத்திற்கும் CPIM க்கும் இடதுசாரிகளுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வேண்டியதில்லை. அதுபோல, வலதுசாரி மற்றும் இடதுசாரி அணுகுமுறைக்கு உள்ள வித்தியாசம் வானம் மற்றும் பூமி போன்றது. ஆனால் CPIM மேடையிலோ அல்லது நிகழ்ச்சியிலோ ஸ்ரீராமச்சந்திரா பாடல் பாடுவதாக யாராவது சொன்னால் நம்புவீர்களா?

சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. CPIM கொடிகளால் சூழப்பட்ட ஒரு மேடையில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ என்ற பாடலை ஒருவர் பாடுவதைக் காணலாம். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பலரும் குறை கூறி வருகின்றனர்.

திரிணாமுல் ஐடி செல் தலைவர் நிலஞ்சன் தாஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “பேய்களின் முகத்தில் ராமர் பெயர்!” என பதிவிட்டுள்ளார்.

இதே வீடியோவை சிலர் பேஸ்புக்கிலும் பகிர்ந்துள்ளனர். “பேய்களின் முகத்தில் ராமரின் பெயர். இந்த ஆண்டு ஒரு புராண மற்றும் அரசியல் பயணம்” என தலைப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில் வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. அசல் வீடியோவில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ என யாரும் பாடவில்லை. அதற்கு பதிலாக ஒரு பழைய ஹிந்தி திரைப்பட பாடல் பாடப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான வீடியோவை பார்த்தால், பாடகரின் தோரணை மற்றும் உதடு அசைவுகள் பாடலின் வரிகள் மற்றும் தாளத்துடன் பொருந்தவில்லை என்பதை காணலாம். எனவே, வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகம் உள்ளது.

பின்னர் வைரலான வீடியோவிலிருந்து ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, தலைகீழ் படத் தேடலின் மூலம் தேடியதில், அதே வீடியோவை டிபியேந்து தாஸ் என்ற ட்விட்டர் (எக்ஸ்) பயனர் பக்கத்தில் காணமுடிந்தது. அதில், ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ என்ற கோஷம் எதுவும் கேட்கவில்லை. மாறாக, மைக் முன் நின்றவர் ‘நீல் ககன் பர் உத்தே பாதல்’ என்ற பழைய ஹிந்தி திரைப்படப் பாடலை பாடிக்கொண்டிருந்தார் என கண்டறியப்பட்டது. யூடியூப்பில் தேடியதில் முகமது ரஃபி மற்றும் ஆஷா போஸ்லே பாடிய அதே பாடல் கிடைத்தது. 

பின்னர் இதுகுறித்து திபியுண்டே தாஸைத் தொடர்பு கொண்டபோது, ​“இந்த வீடியோ கிழக்கு மேதினிபூர் நந்திகிராம் பிளாக் 1 இன் தெகாலி பஜார் பகுதியில் எடுக்கப்பட்டது. கடந்த நவ. 17 அன்று, பல பிரச்னைகளை முன்வைத்து சாலை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது” என்றும் கூறினார்.

இதன் அடிப்படையில், சில முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடப்பட்டது. அதே வீடியோ CPIM மேற்கு வங்காளம் என்ற குழுவில் கண்டறியப்பட்டது. அதில், நாட்டிலும், மாநிலத்திலும் பெண்கள் மீதான கட்டுக்கடங்காத அடக்குமுறைக்கு எதிராக, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக, வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக, வீட்டு வசதி திட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு, வீடுகள், 100 வேலைகள் கோரி, இந்த சாலைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில், கிழக்கு மேதினிபூர் மாவட்டச் செயலாளர் பேரவை உறுப்பினர் மற்றும் உள்ளூர் சிபிஐஎம் தலைவரான பரிதோஷ் பட்நாயக்கை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்கப்பட்டது. கோகுல்நகர் பகுதியில் உள்ள தெகாலி பஜாரில் நடந்த அந்த சாலை கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக அவர் கூறினார். மேலும், “வழக்கமாக எந்த ஒரு கூட்டம் தொடங்கும் முன் நடக்கும் இசை நிகழ்ச்சிதான் இங்கும் நடக்கிறது. ஆனால், அந்த வீடியோவை திரிணாமுல் தற்போது திரித்து பொய்யான கூற்றுக்களை பரப்பி வருகின்றனர்” என தெரிவித்தார்.

பரிதோஷ் பட்நாயக் தனது முகநூல் பக்கத்தில் சாலை சந்திப்பு குறித்த வீடியோவையும், கூட்டத்தில் அவர் பேசும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

முடிவு:

இதன் மூலம் நவம்பர் 17-ம் தேதி நந்திகிராமில் நடைபெற்ற சிபிஐஎம் சாலைக் கூட்டத்தின் வீடியோ மாற்றப்பட்டு சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் பகிரப்படுவது தெளிவாகிறது. 

Note : This story was originally published by ‘Aajtak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.