முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!

ஆன்லைன் ரம்மி விளையாடியதால் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சென்னையை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்த இவருக்கு, வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஆறு மாதம் காலமாக ஆன்லைன் ரம்மி விளையாடி, அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாகராஜுக்கும் அவரது மனைவி வரலட்சுமிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பெருமாள் பயன்படுத்தி வந்த செல்போனை, அடகு வைத்து விட்டு வந்ததால், அதை தட்டிக்கேட்ட மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். நேற்று இரவு தூங்க சென்ற கணவரை, இன்று அதிகாலை பார்த்த போது, அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி கதறி துடித்துள்ளார்.

இதையடுத்து அவரின் உறவினர்கள் மணலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பெருமாளின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனை உடற்கூறு ஆய்வு கூடத்திர்க்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram