ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 7 டிப்ஸ்

ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 7 டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் நமக்கு வங்கிச் சேவையை எளிதாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், ஆன்லைன் வங்கி மோசடிக்கான வாய்ப்புகளையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே,…

ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 7 டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் நமக்கு வங்கிச் சேவையை எளிதாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், ஆன்லைன் வங்கி மோசடிக்கான வாய்ப்புகளையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து, எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும்.

அதனடிப்படையில், ஆன்லைன் வங்கி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 7 டிப்ஸ்-களை தெரிந்துகொள்ளலாம்.

1. உங்கள் கடவுச்சொல்லைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருங்கள்:

ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவது முக்கியம். கடவுச்சொல்லை புதுப்பிக்கும் போதெல்லாம், எப்போதும் வலுவான கடவுச்சொல்லாக அமைப்பது அவசியம். எப்போதும், கடவுச்சொல்லை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

2. நெட்பேங்கிங்கிற்கு பொது கணினிகளைப் பயன்படுத்தாதீர்கள்:

எந்த சூழ்நிலையிலும், நெட்பேங்கிங்கிற்கு பொது கணினிகளைப் பயன்படுத்தாதீர்கள். பொதுச் சாதனத்தைப் பயன்படுத்துவதால், உங்கள் வங்கி விவரங்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.

3. ஆன்லைன் வங்கிச் சேவைக்கு, அதிகாரப்பூர்வமான ஆப்ஸ் அல்லது இணையதளங்களைப் பயன்படுத்தலாம்:

ஆன்லைனில் எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் செய்யப் பாதுகாப்பான மற்றும் சரிபார்க்கப்பட்ட பயன்பாடுகள் அல்லது இணையதளங்களைப் பயன்படுத்த எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. அதாவது, அங்கீகரிக்கப்படாத செயலி/இணையதளத்தைப் பயன்படுத்துவது ஆன்லைன் வங்கி மோசடிக்கு வழிவகுக்கும்.

4. பாதுகாப்பான இணைய இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்:

இலவச இணையம் கிடைத்தால், அதைப் பயன்படுத்துவோம்! அப்படிப் பயன்படுத்தக் கூடாது. இலவச இணையத்தைப் பயன்படுத்துவது, பாதுகாப்பற்றதாக இருக்கலாம், உங்கள் முக்கியமான வங்கித் தகவல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம். எனவே, ஆன்லைனில் பணம் செலுத்தும் போது எப்போதும் பாதுகாப்பான இணைய இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்

5. ஃபிஷிங் அல்லது விஷிங் மோசடிகளுக்கு இரையாகாதீர்கள்

வங்கிக் கணக்கை ஹேக்கர்கள் பிடித்துக் கொள்ள உதவும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது அழைப்புகளைக் கிளிக் செய்வதையோ அல்லது பதிலளிப்பதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மின்னஞ்சல்கள், அழைப்புகள், OTP, கேஷ்பேக், வெகுமதிகள் போன்றவற்றின் பெயரில் உங்களிடம் ஆபத்து நெருங்கலாம்.

6. கணினிகளைப் பாதுகாக்க வேண்டும்:

இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உங்கள் தனிப்பட்ட கணினியில் வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவுவது அவசியம். உங்கள் கணினியில் வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவுவது மட்டுமல்லாமல், தொடர்ந்து புதுப்பித்தல் மற்றும் செயல்படுத்துவது அவசியம். இது உங்கள் முக்கியமான தகவல்களை மோசடியில் இழக்க நேரிடும் அச்சுறுத்தல்கள் மற்றும் தீங்கிழைக்கும் செயல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

7. டெபிட் / கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்:

பயணச் சலுகைகள், பேக்கேஜ்கள் மற்றும் பலவற்றை வழங்குவதாகக் கூறி கார்டு மோசடிகள் பதிவு செய்யப்பட்டதாகப் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உங்கள் கார்டு தொலைந்துவிட்டால், அதைப் புகாரளித்து, வங்கியால் உடனடியாக அதைத் தடுக்கவும். அதற்கு மேல், உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களைத் தெரியாத அழைப்புகள் வரும்போது ஒருபோதும் பகிர வேண்டாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.