சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்தியாவில் 75 நாட்களில் 75 கடற்கரை தூய்மைப்படுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினமானது ஆண்டு தோறும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி பிரித்வி பவனில் புவி அறிவியியல் அமைச்சகம் சார்பில், கடற்கரைகளை தூய்மை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய புவி அறிவியியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வரும் 3வது வாரம் உலக கடற்கரை தூய்மை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த வருடம் தூய்மை தினமானது பிரதமர் மோடியின் பிறந்த தினமாக செப்டம்பர் 17ம் தேதி வருகிறது. பிரதமர் மோடி, கடற்கரை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்தவர் என தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த வருடம் சுதந்திர தினத்தின் 75வது வருடத்தை கொண்டாட்டமான ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் விழாவின் அடிப்படையிலும், பிரதமர் மோடியின் பிறந்த தினத்தில் உலக கடற்கரை தூய்மை தினம் வருவதையடுத்தும் இந்தியாவில் உள்ள 75 கடற்கரைகளை 75 நாட்களில் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய 75 கடற்கரைகளை சுத்தம் செய்யப்பட்டுள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறும். இந்த தனித்துவமான தூய்மைப்பணியில் அதிக அளவிலான தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பங்கேற்று கடற்கரைகளை தூய்மைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.








