ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்; பரிந்துரைகளை அளித்தது குழு

ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளைச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை அளிக்க…

ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளைச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை அளிக்க ஜூன் 10 ஆம் தேதி குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கராமன், உளவியலாளர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் அரசுக்கு அளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அண்மைச் செய்தி: ‘தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் ’Chat’ செய்யலாம்… எப்படி?’

ஆன்லைன் விளையாட்டுகளில் திறமை உள்ளதா? அல்லது வெறும் தந்திரங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆராய்ந்ததுடன், உயிரிழப்புகள், நிதி இழப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டின் தீய விளைவுகள் குறித்து தகவல் தரவுகள் திரட்டப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்கள், விளையாடுவதற்கான கட்டணங்கள் குறித்து ஆராய்ந்ததுடன், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கான அம்சங்கள் பற்றிய பரிந்துரைகளையும் அளித்துள்ளது குழு. குழுவின் பரிந்துரைகளைக் கொண்டு அவசரச் சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.