தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் ’Chat’ செய்யலாம்… எப்படி?

தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் ’Chat’ செய்வது எப்படி என்பதனை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. தொழில் நுட்பம், ஏராளமான வசதிகளை நமக்கு வழங்குகிறது. செல்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்ற அளவில் செல்போன் பயன்பாடு…

தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் ’Chat’ செய்வது எப்படி என்பதனை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தொழில் நுட்பம், ஏராளமான வசதிகளை நமக்கு வழங்குகிறது. செல்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்ற அளவில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும், ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அப்படி கூகுள் வழங்கும் சேவையான கூகுள் அசிஸ்டண்ட். அதன்மூலம், நம்முடைய வேலையை இன்னும் எளிமையாக்குகிறது. போனை தொடாமலே, ஒருவரை அழைக்கலாம் செய்திகளை அனுப்பலாம். அதன்படி, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் குரல் பதிவு மூலமாக இப்போது தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் ’Chat’ செய்யலாம்.

அண்மைச் செய்தி: ‘10-ஆம் வகுப்பில் தேர்ச்சி… யாரும் பேனர் வைக்காததால் தனக்குத் தானே வாழ்த்துக் கூறி பேனர் வைத்த ஜிஷ்ணு’

தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் ’Chat’ செய்ய என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் மொபைலில் கூகுள் அசிஸ்டண்ட் ஆப்ஸைத் திறக்க வேண்டும்.


2. திரையின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.


3. அமைப்புகள் – தனிப்பட்ட முடிவுகள் (Personal results) விருப்பத்தை இயக்கவும்.


4. உங்கள் குரல் உதவியாளரைச் செயல்படுத்த, “OK Google” அல்லது “Hey Google” எனக் கூறவும்.

5. பிறகு, WhatsApp செய்தியை அனுப்பவும், இதன்மூலம் நீங்கள் ஒரு வார்த்தையையும் தட்டச்சு செய்யாமல் Google செய்தியை அனுப்பும். முற்றிலும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அனுபவத்திற்கு, உங்கள் மொபைலைத் திறக்காமலே பயன்படுத்த Google Assistantடை இயக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.