ஆசிய விளையாட்டு போட்டி : வங்க தேசத்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!

வங்க தேசத்தை வீழ்த்தி 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகள் பங்குபெற்றுள்ளான். இந்தநிலையில் இன்று நடைபெற்ற போட்டியில், இலங்கை – வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

போட்டி தொடங்கியதும் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் முஸ்தஃபிசுர் ரஹ்மான், மெகதி ஹசன் மற்றும் சைஃப் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் வங்காளதேச அணி 17.3 ஓவர்களில் 102 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி வெண்கலம் வென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.