ஆசிய விளையாட்டு போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகிறது.

ஆசிய விளையாட்டு ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இந்த நிலையில் இன்று நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

இந்தியா: சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்: சஹிப்சதா பர்ஹான் (கேப்டன்). மாஸ் சஹதத், உஸ்மான், சைம் அயூப், ஹசன் நவாஸ், அப்துல் சமாத், அராபத் மின்ஹாஸ், அகமது டேனியல், முகமது வாசிம், சப்யான் மொகிம், அப்ரார் அகமது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.