ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் : ஓரிரு நாட்களில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் ஓரிரு நாட்களில் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதாவிற்கு கடந்த 10ம் தேதி…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் ஓரிரு நாட்களில் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதாவிற்கு கடந்த 10ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட தூண்டுவோர்க்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள் : ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோர்க்கு 3 மாத சிறைத்தண்டனையோ, 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதேபோல், ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்குவோர்க்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ 10 லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் ஓரிரு நாளில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரை தலைவராக கொண்டு இந்த ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.