4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது கர்நாடக காங்கிரஸ் – ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதி ஒதுக்கீடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதியை கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, மதச்சார்பற்ற ஜனதா…

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதியை கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தனர். இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு, பாஜக தலைமை மீண்டும் சீட் வழங்கவில்லை என்று பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

இதனால் பாஜகவில் இருந்து தொடர்ந்து பலர் விலகி வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா, லட்சுமண் சாவடி என தொடர்ந்து பாஜகவின் பலமாக இருந்த பல பேர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து விலகினர். மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸில் ஐக்கியமாகினர்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் வெளியிட்ட 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, அவர் பலமுறை வென்ற ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியையே, காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.