இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ள தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் பணிகள் என்ன என்பதை பார்ப்போம்.
இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் செயலை தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் இணையவழி விளையாட்டுகளுக்கு பதிவு சான்றிதழ் ஆணையத்தால் வழங்கப்படும். இணையவழி விளையாட்டுகளை கண்டறிந்து, அட்டவணையில் சேர்ப்பதற்கு, அரசை பரிந்துரைக்கும் பணியை மேற்கொள்ளும்.
இதையும் படியுங்கள் : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் : ஓரிரு நாட்களில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு!
தமிழ்நாட்டில் இணையவழி விளையாட்டு நடத்துபவர்களின் செயல்பாட்டை மேற்பார்வை செய்தல், விளையாட்டு தொடர்பான தகவல் மற்றும் தரவுகளை சேகரித்து பராமரித்தல் உள்ளிட்டவற்றை இந்த ஆணையம் கண்காணிக்க உள்ளது.
அவசியமான நேரத்தில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் இந்த ஆணையம் பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசுக்கு அறிக்கைகளை அனுப்பி, இணையவழி விளையாட்டுகள் தொடர்பான ஆலோசனை வழங்கும். சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, குழுக்களை அமைப்பதற்கான அதிகாரங்களும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.







