முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்? – அமைச்சர் சாமிநாதன் விளக்கம்

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிறமாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016-ம் ஆண்டு முதல் 2021 வரையிலான காலகட்டத்திற்கு, விருதுக்கான சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரையரங்குகளில் பொங்கலுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு கோரி விண்ணப்பித்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிற மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு

Web Editor

எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் – கைது

G SaravanaKumar

“சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி” -தொல்.திருமாவளவன்

Halley Karthik