தமிழ்நாட்டில் ஆன்லைன் கார் விற்பனை அதிகளவில் விரும்படுவதை மூலதனமாக வைத்து பலர் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கார் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு கார் வியாபாரிகள் சங்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் கூறியதாவது,
தமிழகத்தில் பழைய வாகனங்களை விற்பனை செய்வதில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆர்,டி,ஓ அலுவலகத்தில் போதுமான அலுவலர்கள் இல்லாததால் ஹெச்.பி கேன்சலுக்கும் இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
ஆன்லைன் கார் வியாபாரத்தில் பெரிய அளவில் மோசடி நடப்பதால் வியாபாரிகள் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
—வேந்தன்







