மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி  கொடுக்காததை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஈரோடு…

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி  கொடுக்காததை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஈரோடு மூலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மண்டல தலைவர் சி. காமராஜன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வி.சி. வேதானந்தம் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், மாநகராட்சி பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.