வடபழநி கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு- முருகனுக்கு 108 கலசாபிஷேகம்

சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவுவை முன்னிட்டு முருகனுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா இன்று விமர்சையாக நடைபெறுகிறது. காலை…

சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவுவை முன்னிட்டு முருகனுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.

சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா இன்று
விமர்சையாக நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் முருகனுக்கு 108 கலசாபிஷேகம்
நடைபெற உள்ளது.

பழனியில் உள்ள தண்டாயுதபாணியைப் போல சிறப்பு வாய்ந்த ஆலயம் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலாகும். இது செவ்வாய் ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம்.

இங்குள்ள முருகனுக்கு வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பாக விழா நடைபெறும்.

இன்றைய தினம் வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு
விழா இன்று விமர்சையாக நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை
வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இன்று 200 கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, முருகனுக்கு 108 கலசங்களால் பூஜைகள் செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி முருகன் சந்நிதியை சுற்றியுள்ள கடவுள் சந்நிதிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.

1890-ம் ஆண்டு மிக எளிமையாக  நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலுக்கு, 2007ல்
கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 14ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பாலாலயம் செய்யப்பட்டு ஆகம விதிகளின் படி திருப்பணிகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஜன., 23ம் தேதி மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக
நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு விழா இன்று நடக்கிறது.
இதனை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை வளர்க்கப்பட்டு, தேவதா அனுக்ஞை,
விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆச்சார்யார் ரக்‌ஷா பந்தனம், அஷ்டோத்திர சத கலாபிஷேகம்
நடந்தது. பின், முதல் கால பூஜைகள், வேதபாராயணம், விசேஷ திரவிய ஹோமம் ,
பூர்ணாஹுதி, தீபாராதனை போன்றவை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோயில் தக்கார் ஆதிமூலம், கோயில் துணை ஆணையர் முல்லை
உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு நாளான இன்று காலை 6:15 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத, திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடைபெற்றது.

பின், மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, கடப்புறப்பாடு, அனைத்த பரிவார
மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம், வடபழநி ஆண்டவருக்கு அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது.

இந்த நிகழ்வுகள் குறித்து நமது நியூஸ் 7 தமிழ் பக்தி யூ டியூப் பக்கத்தில்
நேரலையாக கண்டுகளிக்கலாம்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.